Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் இன்று முதல் ... பண்ணாரி குண்டம் விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம் பண்ணாரி குண்டம் விழா: காத்திருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

31 மார்
2021
11:03

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி, கரும்பு தொட்டில், உருண்டு கொடுத்தல் என ஆடு, கோழி பலியிட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.கடந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு பங்குனி பொங்கல் விழா கடந்த 23 ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு அபிேஷக, ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து கொடி மரத்தில் பூஜாரிகள் கொடியேற்றினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை தரிசித்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு மேல் மின் விளக்கு அலங்கார தேர் பவனி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 2 ந் தேதி தீர்த்த வாரியுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. திருவிழாவிற்காக காரைக்குடி, மதுரை, அருப்புகோட்டை, திண்டுக்கல், பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்களுக்கு இலவச மாஸ்க், சானிடைசர் வழங்கப்பட்டது.மேலும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்திருந்தார்.

மானாமதுரை: தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 23 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. தாயமங்கலத்திற்கு அருகே உள்ள மானாமதுரையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று தாயமங்கலம் ரோட்டில் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar