Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீப தரிசனம் இல்லாத கோயில் லிங்க வடிவில் மாரியம்மன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐயப்பனுக்கு அங்கி அணிவித்த மாமன்னர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
05:04


சபரிமலை ஐயப்பனுக்கு நம்மால் இயன்ற நெய் தேங்காயை நாம் ஆண்டுதோறும் காணிக்கையாக அளிக்கிறோம். அந்தக்காலத்தில் ஐயப்பன் கோயில் போய் திரும்ப வேண்டுமானால், ஒரு மாதம் வரை ஆகி விடும். எனவே, அவருக்கு படைக்க நெய் பலகாரங்களைக் கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது. நெய் பலகாரங்கள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கலாம் என்பதால், அதைக் கொண்டு சென்றனர். இப்போதும், அதே வழக்கப்படி நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம். எத்தனை அபிஷேகங்கள் நடந்தாலும், நெய் அபிஷேகத்திற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. நெய்யே பிரசாதமாக எடுத்து வருகிறோம். நமது காணிக்கைகள் மிகவும் எளியவை. ஆனால், ஐயப்பனுக்கு மண்டல பூஜையின் போது அணிவிக்கப்படும் தங்க அங்கியை வழங்கிய மாமன்னர் பற்றி உங்களுக்கு தெரியுமா ? 


அவர் தான் சித்திரை திருநாள் மகாராஜா. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் மாமன்னர். இவர் தான் தங்க அங்கியை காணிக்கையாக அளித்தவர். மண்டல பூஜை சமயத்தில், தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் சூரியன் மாறும் நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நெய் திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் வழங்கப்படுவதாகும். இவ்வழக்கத்தையும் சித்திரை திருநாள் மகாராஜாவே ஏற்படுத்தினார். எனவே இவரைக் கவுரவப்படுத்தும் வகையில், இவரது பிறந்தநாள் சபரிமலையில் முக்கியத்துவம் பெறுகிறது. இவர் ஐப்பசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்த ஜென்ம நட்சத்திரத்தில், இவரது ஐயப்ப சேவையை நினைவு கூறும் வகையில், சித்திரை ஆட்டத் திருநாள் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். சபரிமலை நடை மண்டல பூஜைக்காக 41 நாட்களும் மகரவிளக்குக்காக 20 நாட்களும் திறந்திருக்கும். அதுபோல எல்லா தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் ஓணம் பண்டிகை, கோயில் பிரதிஷ்டை தினம் ஆகிய தினங்களிலும் திறந்திருக்கும். இந்த வரிசையில் சித்திரை ஆட்ட திருநாளும் இடம் பெற்றிருக்கும் என்றால் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விழாவிற்கு ஒருநாள் முன்னதாக, அன்று மாலையே நடை திறக்கப்படும். சித்திரை ஆட்டத் திருநாளன்று விசேஷ பூஜைகள், அபிஷேகம் நடத்தப்படும். இதில் திருவிதாங்கூர் அரண்மனை பிரதிநிதிகள் கலந்து கொள்வது வழக்கம். காலை நடை திறந்ததும் கணபதி ஹோமம் நடக்கும். பின்னர் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்படும் நெய் பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar