Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிவகங்கை கோயில்களில் புத்தாண்டு ... மங்கள ஆண்டாக அமைய கோவில்களில் மக்கள் வழிபாடு மங்கள ஆண்டாக அமைய கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயிலில் தமிழ்புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம்  கோயிலில் தமிழ்புத்தாண்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
04:04

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், சிவன்கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே வழிவிடுமுருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகன்அபிேஷகம் செய்து பட்டாடை அணிவித்து தீபாராதனை நடந்தது.குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில், குமராய்யா கோயில், சிவன் கோயில், பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர்கோயில், காட்டூரணி ஐயப்பன் கோயில், ரயில்வே ஸ்டேசன் ரோடு வெட்டுடையாள் காளியம்மன்கோயில், வெளிப்பட்டினம் பாலதண்டாயுத சுவாமிகோயில், முத்தலாம்மன், பாலசுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய இடங்களில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பழங்களால் அலங்காரம், பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.

முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாடானைதமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு திருவாடானை, தொண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், தாலுகா அலுவலகம் முன்உள்ள அதிர்ஷ்ட விநாயகர்,பாரதிநகர் கற்பகவிநாயகர்,ஆந்தகுடி முருகன், திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன், பஸ்ஸ்டாண்ட் விநாயகர் கோயில்களில் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பரமக்குடிசித்திரை பிலவ வருட தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.பரமக்குடி சுந்தரராஜபெருமாள் கோயிலில் நேற்று காலை உற்ஸவர்சிறப்பு அலங்காரத்தில்அருள்பாலித்தார். தொடர்ந்து காலை மாலை நேரங்களில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சுவாமி கோயிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள்சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில், மீனாட்சி அம்மன், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில், நயினார்கோவில்நாகநாதசுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலம்சித்திரை முதல் நாளை முன்னிட்டு, ஆர்.எஸ். மங்கலம் கைலாசநாதர் கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போன்று ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் ஆலயத்தில், அரசாள வந்த அம்மன்,துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், மூலவருக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.தேவிபட்டினம்தேவிபட்டினம் அருகே அழகன்குளம் அழகுநாச்சி அம்மன் ஆலயத்தில், சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு, காலை 10:00 மணியளவில் மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின் நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பெருநாழிபெருநாழி அருகே முஸ்டக்குறிச்சி இருளப்பசாமி கோயிலில் சித்திரைதமிழ் முதல் நாளை முன்னிட்டு சிறப்புபூஜைகள் நடந்தது.மூலவர் கருப்பண்ணசாமி, இருளாயி, இருளப்பசாமி, காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கிடா பலியிடப்பட்டு அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதியில் வெளிப்பிரகாரத்தில் வடக்கு மூலையில் ... மேலும்
 
temple news
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் கிராமத்தில், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு அருகே, கல்பாத்தி சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில், பஜனோற்சவம் மற்றும் கும்பாபிஷேக தின ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் புஷ்கரணி திருக்குளத்தையொட்டி, 13ம் நுாற்றாண்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar