Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் ... திருச்சி கொள்ளிட கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை திருச்சி கொள்ளிட கரையில் 37 அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரத்தில் அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 ஏப்
2021
09:04

சோழப் பேரரசின் மிகப்பெரிய அரசனான, ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில், அரண்மனை சுவர் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிறப்பாகஆட்சி செய்தவன் முதலாம் ராஜராஜன். ராஜராஜனின் மகனாகவும், படைத் தளபதியாகவும் போர்களில் வியூகம் வகுத்து, பல நாடுகளை கைப்பற்றியவன் முதலாம் ராஜேந்திரன். அவன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, கங்கை நீரை ஊற்றி, சோழகங்கம் என்ற ஏரியை, வெற்றிச் சின்னமாக நிர்மாணித்தான். அந்த ஏரி அமைந்த ஊரை, தன் தலைநகராக மாற்றி, கங்கை கொண்ட சோழபுரம் என, பெயரிட்டான்.

அரியலுார் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடந்தது. அதில், சோழர் மாளிகையின் அடித்தளப் பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல், மீண்டும் தமிழக தொல்லியல் துறை சார்பில், அப்பகுதியில் அகழாய்வு துவங்கப்பட்டது. இதுவரை, மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப் பட்டு உள்ளன. அதில், மூன்றரை அடி ஆழத்தில், செங்கல் சுவர் வெளிப்பட்டது. இந்த சுவர், 10 மீட்டர் வரை நீளமாகச் செல்கிறது. இதே குழிகளில், மேற்கூரையின் ஓடுகள், உடைந்த செங்கற்கள், வட்ட வடிவமான செம்பு நாணயம், இரும்பு ஆணிகள், சீன மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இது குறித்து, தொல்லி யல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதலாம் ராஜேந்திரன் பெற்ற, கங்கை வெற்றியின் அடையாளமாக அமைக்கப்பட்ட நகரம் தான் கங்கைகொண்ட சோழபுரம். ஏற்கனவே, இந்த ஊரில் அகழாய்வு செய்துள்ள மாளிகைமேடு என்ற இடத்தில் தான், தற்போது, அகழாய்வு செய்யப்படுகிறது. இங்கு கிடைத்துள்ள போர்சலன், செலடான் போன்ற சீன மண்பாண்டங்களை, சோழ நாட்டுக்கும், சீன நாட்டுக்கும் இடையே நடந்த வர்த்தகத்துக்கான சான்றாகக் கொள்ளலாம். மேலும், அகழாய்வு செய்யும் போது, புதிய தொல்பொருட்களும், புதிய தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: ஆயுத பூஜை விழாவையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகளும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar