Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்டாலினுக்காக முத்தாலம்மன் ... இலக்கியக்கழகம் சார்பில் சொற்பொழிவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

03 மே
2021
04:05

கிருஷ்ணகிரி: சென்னானுார் அருகே, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்த சென்னானுார் அருகே பாறை குகையிலுள்ள ஓவியங்கள் ஆய்வு செய்யப்பட்டது.


இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: வெண்சாந்து ஓவியங்கள், 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் குறியீடுகளும், மனித உருவங்களும் உள்ளன. நடுவிலுள்ள ஓவியத்தொகுதியில் பெண் நேராகவும், அவளுக்கு இருபுறமும் இரண்டு ஆண்கள் தலைகீழாகவும் உள்ளனர். பெண் என்பதை காட்ட இரண்டு புள்ளிகள் மார்புகளாய் காட்டப்பட்டுள்ளன. வலப்பக்கம் சற்று கீழே கைகளை துாக்கி மனித உருவமும், அதன் இடுப்பில் வாளும், அதை இன்னொருவன் தொடுவதுபோலவும் உள்ளது. இதற்கு நேர் இடப்புறம் நடந்து செல்லும் உருவமும், அதற்கு கீழே ஆணும் பெண்ணும் உள்ளன. ஆணின் இடையில் வாளும், கால்களை அகல வைத்து வலது கையை துாக்கி இடது கையால் அருகிலுள்ள பெண்ணை பிடித்திருக்கிறான். இரண்டு நாய் போன்ற விலங்குகளும் உள்ளன. ஒருவன் வலது கையில் வாளை ஓங்கியவாறும், இடது கையால் அருகில் உள்ளவனை பிடித்தபடியும் உள்ளான். ஆங்காங்கே சில மனித உருவங்கள், பாண்டில் விளக்கு, முக்கோணம், சூலம், உடுக்கை போன்ற குறியீடுகளும் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar