Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கடம் போக்கும் சதுர்த்தி நாயகன் ஆறு வாளில் இருந்தும் விலகுபவன் ...
முதல் பக்கம் » துளிகள்
அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
07:05



சுதந்திரத்திற்கு முன்பிருந்த காலத்தில் நம் நாட்டில் மருத்துவ வசதி அதிகம் கிடையாது. அப்போது சிறுவன் ஒருவனுக்கு  காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என அவனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் புரையோடி வலி அதிகமானது.  வலி தாளாமல் தவித்த சிறுவனை மருத்துவரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் மருத்துவர் பெற்றோரைக் கண்டபடி திட்டி, ‘இப்படியா பொறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். உடனே பட்டணம் போய் காண்பியுங்கள்’’ என்றார்.

அங்கு சிறுவனைச் சோதித்த மருத்துவர், ‘‘புண் செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும்’’ என எச்சரித்தார்.
‘‘காலை எடுப்பதற்கு எந்த மருத்துவமனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் தேவைப்படும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் என் பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன்.  மருத்துவமனை செலவுக்காக மட்டும் 1500 ரூபாய்
கட்டுங்கள். சிகிச்சையைத் தொடரலாம்’’ என்றார்.

 அந்த நாட்களில் அரசு அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் கட்டணம் என்று கேட்ட சிறுவன் அதிர்ச்சிக்கு ஆளானான்.
‘‘ஒரு காலை வெட்டி எடுக்க மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தர முடியும்? இந்தக் கால் தேயும் வரை கடவுள் குடியிருக்கும் கோயிலைச் சுற்றலாம்’’ என மனதிற்குள் எண்ணிய சிறுவன் தன் சொந்த ஊரான காங்கேய நல்லுாரில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்.

108, 1008 என்ற கணக்கெல்லாம் அவனிடம் இல்லை. காலை, மாலையில்  கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் அந்த மருத்துவரே அதிசயிக்கும் வகையில் புண் ஆறத் தொடங்கியது. இனி என் வாழ்நாள் முழுவதும் முருகன் புகழ் பாடுவதிலேயே ஈடுபடுவேன். அதுவே என் தொழில். அதுவே என் உயிர் மூச்சு’’  என ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தச் சிறுவன். தன் உடல் தளரும் வரை அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஆறுமுகன் புகழ் பாடிய திருமுருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar