Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றி, நிம்மதி தரும் வாராஹி வழிபாடு திருவந்திபுரம் கோவில் முன் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17ம் நூற்றாண்டு வில்வீரன் நடுக்கல் கண்டு பிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
06:05

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே தவசிலிங்கபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான வில்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆமத்தூரில் இருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழியில் உள்ள தவசி லிங்கபுரத்தில், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான ஈஸ்வரன் தலைமையில், பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, ஆதி பெருமாள் சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அங்குள்ள ஊரணியில் உட்பகுதியில் வில்லை ஏந்திய நிலையில் வீரனின் நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது: " சங்க காலத்திலிருந்து தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. குறிப்பாக, மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர், பூசல் காரணமாக இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது. இந்த ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ளது. வீரனின் உருவத்தின் இடதுகையில் வில்லை பிடித்த படியும், வலது கையில் வில் அம்பு ஏய்தவாறும் காட்சியளிக்கிறான். காலில்வீரக்கழலும், இடுப்பில் கட்சையுடன் கூடிய குறு வாளுடன், நீண்ட காதுகள், இடது புறம் சற்று சரிந்த கொண்டையுடன் நின்றவாறு காட்சி தருகிறான். சிற்பத்தின் மேல் பகுதி நாசிக் கூடு கொண்ட தோரணை வளைவுடன் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த போது, வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுக் கல்லாக இருக்கலாம். இதன் காலம் 17-ம் நூற்றாண்டு. தற்போது, இப்பகுதி மக்கள் மாலைக் கோயில் என்று வழிபட்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar