எஸ்.பி.பட்டினம் : தீர்த்தாண்டதானம் கடற்கரையில் அமைந்துள்ள சிலை உடைக்கப்பட்டு உள்ளது.
எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. ராமர் பூஜித்த இக்கோயிலில் ஆண்டுதோறும்தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித நீராடி முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்வார்கள்.நீராடிவிட்டு வரும் பக்தர்கள் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விநாயகர், அம்மன், கருப்பர் சுவாமிகளை வணங்கிவிட்டு கோயிலுக்கு செல்வார்கள். இதில் கருப்பர் சிலையின் தலை பகுதி உடைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக் கிராம மக்கள் கூறியதாவது:இப்பகுதியில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சுற்றி திரிகின்றனர். மாலை நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவர்கள் இச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.