Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்கள், புராதன சின்னங்களை ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபாஷ்! சென்னை வடபழநி கோவில் நிலம் அதிரடியாக மீட்பு
எழுத்தின் அளவு:
சபாஷ்! சென்னை வடபழநி கோவில் நிலம் அதிரடியாக மீட்பு

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
11:06

சென்னை :ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியிருந்த, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, அரசு நேற்று அதிரடியாக மீட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு, 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த கோவில் சொத்தை மீட்டு பத்திரப்படுத்தி உள்ளனர். சென்னை, வடபழநியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டவர் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் தங்கள் சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். அதன்படி, கோவிலுக்கு சொந்தமாக, சென்னை சாலிகிராமம், காந்திநகரில், சர்வே எண்கள், 21/2, 23/1, 25/1, 26/1 ஆகியவற்றில், 5.52 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆக்கிரமிப்பு: அவற்றில் ஒரு பகுதி நிலம், பணிபுரியும் மகளிர் விடுதி கட்டுவதற்காக, மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு, மாதம் 1 லட்சம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில், 2008ல் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்திற்கான வாடகை முறையாக கோவிலுக்கு செலுத்தப்படவில்லை. நிலுவைத்தொகை நிறைய உள்ளது. அதேநேரத்தில், மகளிர் விடுதிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலம் போக, மீதமுள்ள காலியிடங்கள் வெளிநபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின; அவற்றை தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி, அவர்கள் வசூலில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது, கோவில் நிலமும் ஆக்கிரமிப்பாளர் வசமானது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த ஹிந்து சமய அறநிலையத்துறை, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் சுறுசுறுப்படைந்து உள்ளது. அதன் முதல்படியாக, நிர்வாக சீரமைப்பு, கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் போன்றவற்றில், அறநிலையத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

5.5 ஏக்கர் நிலம்: அதற்கு உதாரணமாக, 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருந்த, சென்னை சாலிகிராமம் காந்திநகரில் உள்ள, 300 கோடி ரூபாய் மதிப்பிலான, வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் நிலம் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில், காவல், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, இடத்தை கோவில் வசம் ஒப்படைத்தனர். இதில், அறநிலையத் துறை சென்னை இணை கமிஷனர் ஹரிப்ரியா, கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி, சென்னை- உதவி கமிஷனர் கவெனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புனரமைக்கும் பணி: ஆக்கிரமிப்பு அகற்றலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில், சிதிலமடைந்த அனைத்து துறைகளையும் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டிருந்தது. அதன் வாயிலாக, தனியார் சிலர், லட்சக்கணக்கான ரூபாயை வருமானமாக பெற்று பலனடைந்து வந்தனர்.

இதையடுத்து, காவல்துறை, சென்னை மாநகராட்சி, வருவாய் துறை ஆகியவற்றின் உதவியுடன், கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்தி உள்ளோர், வாகனங்களை அகற்ற ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை, யார் ஆக்கிரமித்து இருந்தாலும், அதில், தயவு தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இங்கு மூடப்பட்ட மகளிர் விடுதியை, மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமை கோர முடியாது: அறநிலையத் துறையை பொறுத்தவரை, மிகவும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. எனவே, போகப் போக கோவில்களுக்கான வருமானம் பெருகும். அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் நிலத்தில் வசிப்பவர்களை, வாடகை தாரர்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, யாரும் உரிமை கொண்டாட முடியாது.தற்போது மீட்கப்பட்ட நிலத்தில், சமுதாய நோக்கத்துடன், ரியவர்களுடன் கலந்து ஆலோசித்து, ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும்!: கோவில் சொத்து ஆக்கிரமிப்பில், அ.தி.மு.க.,வினருக்கு தொடர்பிருக்குமேயானால், சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்படிப்பட்ட ஆட்களால்தான், மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாமல், ஆட்சியை இழந்தோம் என்பதையும் உணர வேண்டும். அ.தி.மு.க.,வினருக்கு மட்டுமின்றி, அனைத்து கட்சியினருக்கும் இது பொருந்தும். தங்கள் கட்சியினர் யாரேனும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அந்த சொத்துக்களில் இருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்தே, அறநிலையத்துறை அமைச்சரும், கமிஷனரும் அதிரடியாக களமிறங்கி, வடபழநி ஆண்டவர் கோவில் சொத்துக்களை மீட்டுள்ளனர். இந்நடவடிக்கை, எஞ்சிய சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் தொடரும் என எச்சரித்துள்ளனர்.எனவே, இப்போதே அரசியல் பலமிக்க ஆக்கிரமிப்பாளர்கள், கோவில் சொத்துக்களில் இருந்து வெளியேறுவது நல்லது. இல்லாவிடில், நடவடிக்கைக்கு உள்ளான பின், வரும் தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையையும், ஓட்டுகளையும் இழக்க நேரிடும்.

அமைச்சரும், கமிஷனரும் நடவடிக்கை எடுப்பரா?: வடபழநி ஆண்டவர் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக, கடந்த ஆட்சியின் போது, கோவில் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில், தங்களின் பொறுப்பை தட்டிக்கழித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற சொத்து ஆக்கிரமிப்புகள் இன்றோ, நேற்றோ திடீரென முளைத்து விடவில்லை; 10 ஆண்டுகளாக ஊரறிய அரங்கேறி வந்துள்ளன. இதைத் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை சார்ந்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தற்போது, கோவில் சொத்துக்களை மீட்க, அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, இது டிரெய்லர் தான்; இனி தான் மெயின் பிக்சரை பார்க்கப் போகிறீர்கள்... என, பேட்டி அளித்துள்ளார். ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பதுடன், ஆக்கிரமிப்புக்கு துணை போன அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை பாய்ந்தால் மட்டுமே, இந்த துணிகர ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும், கமிஷனர் குமரகுருபரனும் இதைச் செய்வர் என நம்புவோமாக.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, புஷ்ப பல்லாக்கில் ... மேலும்
 
temple news
சென்னை: அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு காஞ்சி காமகோடி பீடம் வாயிலாக 300 நாட்கள் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பின்பு புதிய வடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தின், தென்புறத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar