Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோவில் ... பூங்குளத்து அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேகம் பூங்குளத்து அய்யனார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு
எழுத்தின் அளவு:
பெண்களையும் அர்ச்சகர்களாக்க முயற்சிப்போம்: சேகர்பாபு

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
04:06

 சென்னை: பெண்கள் விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து, அர்ச்சகர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம், என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில், அமைச்சர் சேகர்பாபு தலைமையில், இணைக் கமிஷனர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.தாரக மந்திரம் கூட்டம் முடிந்த பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: அறநிலையத்துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. படிப்படியாக அறிக்கையாக வெளியிட்டு செயல்படுத்தப்படும்.

அறநிலையத் துறையின் தாரக மந்திரமே வெளிப்படைத்தன்மை தான். கோவில்களில் தமிழில்அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சி, அர்ச்சகர்களுக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ளது. நிலங்கள் மீட்புதமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை, சம்பந்தப் பட்டஅர்ச்சகர்களின் மொபைல் போன் எண்ணுடன், கோவில்களில் வைக்கப்படும்.அனைத்து ஜாதியினரும், 100 நாட்களுக்குப் பின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும்.

பெண்கள் விரும்பினால், அவர்களுக்கும் பயிற்சி அளித்து, அர்ச்சகர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். வடபழநி வேங்கீஸ்வரர் கோவில் குள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி மீட்கப்படும். புகார்களின் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நடவடிக்கைஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் தேவை உள்ள இடத்தில், சட்டத்திற்கு உட்பட்டு, உடனடியாக நியமிக்கப்படுவர். எந்த வகையில் பணியாளர் நியமனம் செய்வது என்பது குறித்து, சட்ட வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின், முறையாக செயல்படுத்தப்படும்.ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர்நியமனம் தொடர்பாக, தொடர்ந்து என்ன நடை முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதுதான் கடைப்பிடிக்கப்படும். எந்த நியமனமாக இருந்தாலும், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் செயல்படுத்தப்படும்.அறநிலையத்துறைக்கு, டிவி துவங்குவது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிதி ஆதாரத்தை பொறுத்து துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar