Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பமேளாவில் 1 லட்சம் பேருக்கு போலி ... பல்லவர் கால மூத்ததேவி கல்வெட்டு விழுப்புரம் அருகே கண்டுபிடிப்பு பல்லவர் கால மூத்ததேவி கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை தேவதை: தேவபிரசன்னத்தில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை தேவதை: தேவபிரசன்னத்தில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
10:06

 நாகர்கோவில் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் துணை தேவதை மண்ணில் புதைந்திருப்பது தேவபிரசன்னம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.

பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் வயநாடு ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி ஆகியோர் தேவபிரசன்னம் நடத்தினர். தீ விபத்திற்கு அம்மனே காரணம். தினப்படி நிவேதனத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். தந்திரிக்குரிய மரியாதைகள் தரப்பட வேண்டும். நாகர் சன்னதியின் கூரை அகற்றப்பட வேண்டும். அம்மனுக்கு மாதம் ஒரு நாள் மூன்று வேளை பிராமண பூஜை நடத்த வேண்டும். கொடிமரத்தை சுற்றி பலிக்கல் அமைக்க வேண்டும். மூலஸ்தான கூரை அமைக்கும் போது பலா மரத்தின் தடிகளை பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு நாள் தேவசம்போர்டு சார்பில் தங்க தேரில் தேவியை அமர்த்தி பவனியாக வரவேண்டும். இவ்வாறு பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர்.

துணை தேவதை: கோவிலில் தேவியுடன் ஒரு யக்ஷி -துணை தேவதை தெரிவதாகவும், அதற்கும் சன்னதி அமைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு இல்லை என தேவசம்போர்டு அதிகாரிகள் மறுத்தனர். அந்த சிலை இருக்கும் இடத்தை பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர். அங்கு மண்ணுக்குள் தோண்டியபோது சிலை இருந்தது. சிலை வெளியே எடுக்கப்பட்டது. சன்னதி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலூர்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற மங்களநாதர் ... மேலும்
 
temple news
சுசீந்திரம்; சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ( ஆருத்ரா தரிசனம் ) ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூர் ஆதினம் ராமசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar