Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போகாமலே புண்ணியம் நினைத்ததை நிறைவேற்றும் யோக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
டில்லி வெங்கடேஸ்வரா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06


டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா (பாலாஜி) மந்திர் என்னும் பெயரில் ஏழுமலையான் கோயில் உள்ளது. திருப்பதியைப் போல இங்கும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.    
நுாறு ஆண்டுக்கு முன் வேலைவாய்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக இப்பகுதியில் குடியேறிய மக்கள் கோயிலை நிர்மாணித்து வழிபட்டனர். நீதிபதி ராஜகோபால அய்யங்காரின் தலைமையில் ராஜ கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஸ்ரீவேங்கடஸ்வரா மந்திர் சொசைட்டியினர் நிர்வகிக்கின்றனர்.  
 ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கருவறையில் சீனிவாசப்பெருமாள் மூலவராகவும், அலர்மேல் மங்கை தாயார் தனி சன்னதியிலும் அருள்கின்றனர். முன்புறம் 41 அடி உயர கொடிமரம் செப்புக் கவசத்துடன் உள்ளது. ஆண்டாள், அனுமன், ஆழ்வார்கள், நிகமாந்த மகாதேசிகன், லட்சுமி நரசிம்மர், சுதர்சனாழ்வார் சன்னிதிகள் பிரகாரத்தில் உள்ளன. இங்குள்ள கண்ணாடி அறை கலை நயம் மிக்கது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும் மாமரமே தலவிருட்சமாக உள்ளது. வளாகத்தில் உள்ள நந்தவனத்திலேயே பூஜைக்குரிய பூக்கள், துளசி சேகரிக்கப்படுகின்றன. நம்மாழ்வார் சன்னதியின் மீது குடை விரித்தது போல மகிழ மரம் இருப்பது சிறப்பு.  
 சித்ரா பவுர்ணமியன்று கஜேந்திர மோட்ச விழா நடக்கிறது. வசந்த மண்டபத்தின் அருகில் கஜேந்திரன் என்னும் யானையின் சிலை உள்ளது. இதன் அருகிலுள்ள தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு யானை நீராட வரும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது. அப்போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்.  
கார்த்திகை உத்திரட்டாதியன்று நடக்கும் வார்ஷீக விழாவன்று அபிஷேகமும், வீதியுலாவும் நடக்கும். அனுமனுக்கு மார்கழி மூலத்தன்று வடைமாலை சேவை நடக்கும். திருப்பதியைப் போலவே இங்கும் பக்தர்கள் முடிக்காணிக்கை, காது குத்துதல், அங்கப் பிரதட்சிணம் நேர்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனர்.  இங்குள்ள பாடசாலை மூலம் பக்தர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார்களின் வரலாறு சொல்லித் தருகின்றனர். தினமும் அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தின் போது கோபூஜையும் நடக்கிறது.
செல்வது எப்படி: டில்லியில் இருந்து காந்தி மார்க்கம் வழியாக 22 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிவாரம், பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:00 – 11:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 011 – 2610 9096

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar