Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலம் அடையும் கோவில்கள்! ... இந்தாண்டும் வடமதுரை பெருமாள் கோயிலில் பக்தர்களின்றி ஆடித்திருவிழா இந்தாண்டும் வடமதுரை பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வதேச சுற்றுலா மையமாகிறது அயோத்தி!
எழுத்தின் அளவு:
சர்வதேச சுற்றுலா மையமாகிறது அயோத்தி!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2021
12:07

அயோத்தி: அயோத்தியில் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரி துவங்கும் என்றும், சர்வதேச தரத்தில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், பிரதமர் மோடியிடம், உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டம்: உ.பி., மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அயோத்தி வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.
ராமாயண வனம்: அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: * அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில், அயோத்தியில் அரசு - தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில், ராமாயண் வனம் உருவாக்கப்பட உள்ளது.


* மேலும், 1,200 ஏக்கரில் வேதிக் நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல், மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன
* உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம்பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன
* ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் போது, அயோத்தியின் முகமே முற்றிலும் மாறியிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar