Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 63நாயன்மார்களும் அவர்களின் குருபூஜை ... கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை ! கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை !
முதல் பக்கம் » துளிகள்
குரு பூர்ணிமா என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
குரு பூர்ணிமா என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
03:07

குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது, மேலும், இந்த திருநாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர் ஒரு சிறந்த குருவாகக் கருதப்பட்டவர். மேலும், அவர் வேதங்களை 4 வகைகளாக பிரித்தவர். அதாவது, வேதங்களை, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் மிக நீளமான பிரம்மாண்ட காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் இவரே.

சமஸ்கிருத வார்த்தை: குரு பூர்ணிமா தினமானது, ஆசிரியர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் கௌரவிக்கும் நாளாகும். சமஸ்கிருத வார்த்தையான ‘குரு இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது ‘குஎன்பது ‘இருள்என்று பொருள் மற்றும் ‘ரு என்பதன் அர்த்தம் ‘இருளை அல்லது அறியாமையை நீக்குதல். அதாவது, குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். புத்தர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் முக்கியமான தினமாகும். இந்த நாளில், புத்தர் தனது முதல் பிரசங்கத்தை சார்நாத்தில் வழங்கினார். சமணர்களுக்கும் இந்த நாள் முக்கியமானது.

குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம்: மிகப் பெரிய முனிவரும், மகாபாரதத்தின் ஆசிரியருமான வேத வியாசரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் குரு பூர்ணிமா விழா அனுசரிக்கப்படுகிறது. மகாபாரத காவியத்திலும் அவர் ஒரு முக்கிய நபராக விளங்கினார். மகாபாரதம் தவிர, இவர் 18 இந்து புராணங்களையும் எழுதியுள்ளார். மேலும்,வேதங்கள் நான்கையும் திருத்தியுள்ளார். வேத வியாசரின் பிறந்த நாளை குரு பூர்ணிமாவாக மக்கள் கொண்டாடுவதற்கான காரணம் என்னவென்றால், வியாசர் பெரிய முனிவர் மட்டுமின்றி, மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தவர். அவரது குரு குலத்தில் படிக்கவும், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் ஏராளமான மாணவர்கள் அங்கு சேர்ந்தனர். இந்த நாளில் மக்கள், அறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கியதற்காக அவர்களின் ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
சித்திரை வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒருமுறை திருக்கயிலாயத்தில் ... மேலும்
 
temple news
காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலம், சனி பகவானால் ஏற்பட்ட ... மேலும்
 
temple news
ஜெகந்நாத் கோவில் என்றால், அனைவரும் ஒடிசா மாநிலம் பூரிக்கு தான் செல்வர். ஆனால் அதே ஆன்மிகம், கலாசாரத்தை ... மேலும்
 
temple news
கோவிலுக்குள் சென்று சாமியை தரிசிக்க முடியாதவர்கள், கோவிலுக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் ... மேலும்
 
temple news
மனிதர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு தான் செல்வ, செழிப்பு இருந்தாலும் ஆரோக்ய குறைபாடு இருந்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar