Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு : மாங்கல்ய பலம்பெற ... சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடிப்பெருக்கு, 189 ஆவது குருபூஜை சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று மச்சமுனி சித்தர் குரு பூஜை
எழுத்தின் அளவு:
இன்று மச்சமுனி சித்தர் குரு பூஜை

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
12:08

மச்சமுனி சித்தர் ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்து, திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.

இவர் காக புசுண்டரின் சீடராவார். மச்சமுனி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர். மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன் இருந்தது. அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே ஈஸ்வரனின் காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது. மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 62 நாள் ஆகும். மச்சமுனி சித்தர் விசாலாட்சி சமேதராக மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் காசிவிஸ்வநாதரிடம் தன் ஆன்மாவையும், தன் உடலை முருகன் உருவாக்கிய கங்கை தீர்த்தத்தில் மீனாகவும் ஜீவசமாதி அடைந்துள்ளார். பக்தர்கள், தயிர் வாங்கி சுனை நீரில் விடும்பொழுது  மீன் வடிவத்தில் வந்து தயிரை உண்டு நம் பாவங்களை களைவர் என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar