Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலில் இரவில் ... அன்னூர் அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசம் அன்னூர் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: கள ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர்
எழுத்தின் அளவு:
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: கள ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர்

பதிவு செய்த நாள்

07 ஆக
2021
03:08

அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த, ஆயத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது.

கடந்த மாதம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்ட போதும், இக்கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் (நிர்வாகம் மற்றும் திருப்பணி) கள ஆய்வு மேற்கொண்டார். கோவில் முழுவதையும் சுற்றிப்பார்த்த அவர், சுவர் மற்றும் கதவில், கலைநயமிக்க வேலைப்பாடுகளை பார்த்து வியந்தார். கோவிலின் முகப்பில் உள்ள காலணிகள் வைக்கும் இடத்தை, வேறிடத்துக்கு மாற்றவும் ஆலோசனை வழங்கினார். பழமை மாறாமல் கோவிலை பராமரிக்க வேண்டும், என்றார். கோவில் தெப்பக்குளத்தை பார்வையிட்ட அவர், ஏராளமான மீன்கள் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்து, எனது மொபைல் போனில், புகைப்படம் எடுத்துக் கொண்டார். தெப்பக்குளத்தில் நடக்கும் பூஜை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் முடிவில், கூடுதல் ஆணையர் கண்ணன் கூறியதாவது; கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதில் எந்தெந்த பணிகள் தேவை, தேவையில்லை என்பதை அறிவதற்காகவும், வேறென்ன பணிகள் செய்ய வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, குட முழுக்கு சார்ந்த பணிகள் துவங்கும். அருகேயுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலை புனரமைப்பது தொடர்பாக, திட்ட மதிப்பீடு தயாரித்து கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காசிகவுண்டன் புதூர், ஆகாச ராயர் கோவில் குட முழுக்கு தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar