Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எதிர்மறை எண்ணம் நீங்க .. காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனபாரம் தீர ஏரல் வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
10:08

சேர்மன் அருணாசல சுவாமிகள் கோயில் துாத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ளது. முன்னோர் வழிபாட்டு நாளான ஆடி அமாவாசையன்று இவரை தரிசித்தால் மனதிலுள்ள பாரம் அனைத்தும் தீரும். 


சேர்மன் அருணாசல சுவாமிகள் திருச்செந்துார் அருகிலுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி – சிவனனைந்த அம்மையார் தம்பதிக்கு 1880, அக். 2ல் மகனாக பிறந்தார். இவரது பெற்றோர் கல்வி கற்க ஏற்பாடு செய்தனர். அனைத்து கலைகளிலும் வல்லவராக திகழ்ந்த அருணாசலம் சுவாமிகள் மவுன விரதம் இருந்து பக்தி யோகத்தை கடைபிடித்தார். அவரை தரிசிக்க வந்த மக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆறுதல் வழங்கி பிரச்னை தீர உதவினார். இவரது நீதி, நேர்மையைக் கண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி வகிக்க அனுமதி அளித்தனர். 1906 செப். 5ல் பதவி ஏற்றார். 1908 ஜூலை 27 வரை பணியாற்றிய இவர் ‘சேர்மன் அருணாசலம்’ என மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். 28வயது வரையில் வாழ்ந்த இவர் திருமணம் செய்யவில்லை.
ஒருநாள் தன் சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து ‘‘தம்பி!  1908 ஜூலை 28 ஆடி அமாவாசையன்று மதியம் 12:00 மணிக்கு கடவுளின் திருவடியை நான் சேர இருக்கிறேன். ஏரலுக்கு தென்மேற்கில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் வடகரையிலுள்ள ஆலமரத்தின் அருகில் சமாதியில் வைத்து மண்ணும், மலர்களும் இட்டு மூடு. அப்போது மேலே கருடன் வட்டமிட்டு பறக்கும்’’ என்றார். அதன்படியே அருணாசல சுவாமிகள் கடவுளின் திருவடியைச் சேர்ந்தார். கருத்த பாண்டியனும் சமாதி அமைத்தார்.
 அன்று முதல் ஏரல் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வருவோரின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்குகிறார். குறிப்பாக மனநிலை பாதித்தவர்கள் இங்கு தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக திருமண், தீர்த்தம் தருகின்றனர். ஆடி அமாவாசையன்று கொடியேற்றப்பட்டு 12 நாள் திருவிழா நடக்கும். விளாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் சுவாமி தினமும் எழுந்தருள்வார். இங்கு வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள்  சேர்மக்கனி, சேர்மராஜ் என பெயர்களைச் சூட்டுகின்றனர்.
எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து ஏரல் 45 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடி அமாவாசை, தை அமாவாசை
நேரம் : காலை 6:00 – 11:00, மாலை 4:00 இரவு8:00 மணி 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar