Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலையில் கல்வட்டம் ... விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடி பூர தேரோட்டம்: கோயில் வளாகத்தில் நடந்தது விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடி பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை

பதிவு செய்த நாள்

10 ஆக
2021
01:08

டாக்கா: வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar