பதிவு செய்த நாள்
13
ஆக
2021
01:08
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தில் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில், திண்டிவனம் நகராட்சி 24வது வார்டு முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் விஜயகுமார், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், தொழில் அதிபர் சுப்ராயலு, தாசில்தார் பிரபு வெங்கடேசன், மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் நடராஜன், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் செல்வம்.அ.தி.மு.க., பேச்சாளர் தம்பி ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், ஜனார்த்தனன், முரளிதாஸ், சுதாகர், செந்தில், தீர்த்தகுளம் குமரன், மாணிக்கம் மற்றும் விழாக்குழுவினர் சரவணன், வாசு, பாலச்சந்தர், ரகு ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன், சீனு, சேகர், ரவி, சுப்ரமணி மற்றும் ஜக்காம்பேட்டையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.