Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பிகை அளித்த இரண்டு வரங்கள் மலை மீதிருக்கும் மகாதேவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சதுர்புஜ கருடாழ்வார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
03:08


கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி பெருமாள் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி சதுர்புஜ கருடாழ்வாராக இருக்கிறார். இவரை வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் நீங்கும்.  
வாமனர் வடிவில் தோன்றிய மகாவிஷ்ணு மூன்றடி மண்ணை தானம் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியிடம் வந்தார்.  வந்திருப்பவர் கடவுள் என்பதை அறியாமல் அவனும் சம்மதித்தான். தானம் கொடுப்பதை தடுக்க விரும்பிய அசுரகுருவான சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி, வாமனரின் தாரா பாத்திரத்தின் (கெண்டி) துவாரத்தில் தீர்த்தம் வராமல் தடுத்தார். வாமனர் தர்ப்பை புல்லால் துவாரத்தைக் குத்தவே, வண்டான சுக்கிராச்சாரியாரின் பார்வை போனது. இங்கு வழிபட்ட சுக்கிராச்சாரியார் மீண்டும் பார்வை பெற்றார். இதன் காரணமாக இத்தலம் வெள்ளியங்குடி என பெயர் பெற்றது. ‘வெள்ளி’ என்பது சுக்கிராச்சாரியாரின் பெயர்களில் ஒன்று. கருவறையில் அணையா தீபமாக இவர் இருக்கிறார். வெள்ளிக்கிழமையில் இங்கு வழிபட்டால் பார்வை குறைபாடு, சுக்கிர தோஷம் நீங்கும். மூலவரின் பெயர் கோலவில்லி ராமர். உற்ஸவர் சிருங்கார சுந்தரர். தாயாரின் திருநாமம் மரகதவல்லி. கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட நிலையில் மூலவர் இருக்கிறார். திருமேனியில் வர்ணம் பூசியபடி இருக்கும் இவருக்கு பாற்கடல்நாதர் என்றும் பெயருண்டு.
ஒருமுறை அசுரர் குல சிற்பியான மயன் இங்கு தவம் புரிந்தான். அவனுக்கு அருள்புரிய வந்த மகாவிஷ்ணு சங்கு சக்கரத்துடன் கருட வாகனத்தில் காட்சியளித்தார். அப்போது மயன் வில்லேந்திய ராமர் கோலத்தில் தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தான். தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கருடனிடம் கொடுத்து விட்டு, ராமனாக தரிசனம் கொடுத்தார். சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கருடன் இங்கு தங்கினார். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடன் சதுர்புஜமுடன் இருக்கிறார். இவருக்கு துளசிமாலை அணிவித்து தீபமேற்றி வழிபட கிரகதோஷம், விஷபயம் நீங்கும். சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர தீர்த்தங்கள் இங்குள்ளன.
எப்படி செல்வது
கும்பகோணம் – அணைக்கரை சாலையில் சோழபுரம் 8 கி.மீ. இங்கிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar