Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோயில்களில் புரட்டாசி விழா அரிய வகை சிவன் சிலை பழையசீவரத்தில் கண்டெடுப்பு அரிய வகை சிவன் சிலை பழையசீவரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத் தடை நீங்கும் 1700 ஆண்டு பழமையான அம்பலவாணர் கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமணத் தடை நீங்கும் 1700 ஆண்டு பழமையான அம்பலவாணர் கோயில்

பதிவு செய்த நாள்

17 செப்
2021
10:09

காரியாபட்டி: களத்திர தோஷம் (திருமண தடை) நீங்க, அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற, அம்பலவாணரை வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மண்டோதரி ராவணனை மணக்க சிவனிடம் வரம் வேண்டினார். காரியாபட்டி முடுக்கன்குளத்தில் உள்ள தாமரைக்குளத்தில் குளித்து, அங்குள்ள வில்வமரத்தடியில் தவம் இருக்க வேண்டினார். அங்குள்ள குளத்தில் குளித்து, வில்வ மரத்தடியில் தவம் இருந்த மண்டோதரிக்கு, அம்பலவாணர் வடிவில் சிவன் காட்சியளித்து, களத்திர (திருமண) தோஷத்தை நீக்கி அருளாசி வழங்கினார். அதற்குப் பின்பு சிவனுக்கு அங்கு ஆலயம் எழுப்பப்படுகிறது. சிவகாமி அம்மாள், நந்திதேவர், பிள்ளையார், பைரவருக்கு தனித் தனி பிரகாரம் வைக்கப்பட்டது. இங்குள்ள தீர்த்த கிணறு, எவ்வளவு வறட்சியிலும் ஒரு போதும் வறண்டது கிடையாது. 30 அடியிலே தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இந்த கிணற்றில் நிழலே விழாது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. அதைவிட ஒவ்வொரு சிவராத்தி நாளன்று சூரிய பகவான் காலை 7:00 முதல் 8.30 மணி வரை தன் ஒளிக்கதிர்களால் அம்பலவாணனை ஆரத் தழுவி, தரிசனம் செய்வது வேறு எங்குமே இல்லாத தனிச்சிறப்பு. கோயிலை ஒட்டி கண்மாய் அமைந்துள்ளது. மழைக் காலத்தில் தண்ணீர் கடல் போல் காட்சியளிக்கும். வயல்வெளிகள் பச்சை பசேல் என பசுமையாக தேவலோகத்தில் இருக்கும் உணர்வை தரும். தினமும் காலை மாலையில் பூஜை நடக்கும். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமணத்தை இங்கு தான் நடத்துவார்கள். ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தன்று திருவாதிரை சிறப்பு பூஜையாக சங்காபிஷேகம், அன்னதானம் நடக்கும்.

ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமையான அம்பலவாணர் - சிவகாமி அம்மாள் ஆலயத்தில், திருமணத்தடை உள்ளவர்கள் மனமுருகி வேண்டினால் தோஷம் நீங்கி, திருமணம் நடைபெறும். அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற்று, உயர்ந்த பதவிகளை அடைய, இங்கு சிறப்பு பூஜை செய்தவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து, கோலோச்சிய வரலாறும் உண்டு. இக்கோயிலின் கட்டட அமைப்புகள் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு விஷயத்தையும் பக்குவமாகவும், அறிவியல் பூர்வமாகவும் அமைந்திருப்பது ஆச்சரியமான ஒன்று. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடுக்கன்குளம் அம்பலவாணர் - சிவகாமி அம்பாளை தரிசித்து சென்றால் எண்ணிய காரியம் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar