Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி பூஜை: அருணாசலேஸ்வரர் ... மஹாராஷ்டிராவில் தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.12 ஆயிரம் மஹாராஷ்டிராவில் தங்க கொழுக்கட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:09

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம் இன்று துவங்குகிறது.மகாளய பட்சம் என்பது, முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், முடியாதவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் திதி கொடுத்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம்.

இதில், பக்ஷம் என்பது, 15 நாட்களை குறிப்பிடும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி அமாவாசை வரை உள்ள, ௧௫ நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்தது. மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை நினைத்து, தர்ப்பணம் செய்ய வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மாத அமாவாசையில், நம் உறவினர் 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில் தான், அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.


மகாளய பட்சத்தில் வரும் பரணியை, மஹாபரணி; அஷ்டமியை மத்பாஷ்டமி; திரயோதசியை கஜச்சாயை என்றும் அழைக்கின்றனர். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில், நம் முன்னோர் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். அந்த சிறப்பு மிக்க மகாளய பட்சம் இன்று துவங்கி, அக்., 6ம் தேதி அமாவாசையோடு நிறைவு பெறுகிறது. இதில், வரும் 24ல் மகா பரணியும், 29ல் மத்தியாஷ்டமியும், அக்., 6ல் மகாளய அமாவாசையும் தர்ப்பணம் செய்ய விசேஷ நாட்களாகும். -- நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar