Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாத சுவாமி கோவிலில் அரசு - ... படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை படித்துறை வரத விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்பலவாணரிடம் மனமுருகினாலே திருமணம், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்!
எழுத்தின் அளவு:
அம்பலவாணரிடம் மனமுருகினாலே திருமணம், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்!

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:09

 காரியாபட்டி : களத்திர தோஷம் (திருமண தடை) நீங்க, அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற, அம்பலவாணரை வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.காரியாபட்டி முடுக்கன்குளத்தில் உள்ள தாமரைக்குளத்தில் நீராடிய மண்டோதரி, ராவணனை மணக்க அங்குள்ள வில்வமரத்தடியில் தவம் இருக்க ,அம்பலவாணர் வடிவில் காட்சியளித்த சிவன், திருமண தோஷத்தை நீக்கி அருளாசி வழங்கினார்.

அதன் பின் அம்பலவாணருக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.இதனுடன் சிவகாமி அம்மாள், நந்திதேவர், பிள்ளையார், பைரவருக்கு தனி பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள தீர்த்த கிணறு எவ்வளவு வறட்சியிலும் வறண்டது கிடையாது. 30 அடியிலே தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இக்கிணற்றில் நிழலே விழாது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு சிவராத்தி நாளன்று சூரிய பகவான் காலை 7:00 முதல் 8:30 மணி வரை தன் ஒளிக்கதிர்களால் அம்பலவாணனை ஆரத் தழுவி தரிசனம் செய்கிறார்.இது வேறு எங்குமே இல்லாத தனிச்சிறப்பு. கோயிலை யொட்டி அமைந்துள்ள கண்மாயில் மழை காலத்தில் தண்ணீர் கடல் போல் காட்சி யளிக்கும். வயல்வெளிகள் பச்சை பசேல் என பசுமையாக இருக்க தேவலோகத்தில் இருக்கும் உணர்வை தரும். தினமும் காலை மாலையில் பூஜை நடக்கும். இப்பகுதியை சேர்ந்தவர்கள் திருமணத்தை இங்கு தான் நடத்துவார்கள்.

ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தன்று திருவாதிரை சிறப்பு பூஜையாக சங்காபிஷேகம், அன்னதானம் நடக்கும். ஆயிரத்து 700 ஆண்டு பழமையான அம்பலவாணர் - சிவகாமி அம்மாள் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மனமுருகி வேண்டினால் தோஷம் நீங்கி, திருமணம் நடைபெறும். அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த பதவிகளை அடைய, இங்கு சிறப்பு பூஜை செய்தவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து கோலோச்சிய வரலாறும் உண்டு. இக்கோயிலின் கட்டட அமைப்புகள் மிகவும் பிரசித்தி பெற்றது. பிரச்னைகளுக்கு தீர்வு காண முடுக்கன்குளம் அம்பலவாணர் - சிவகாமி அம்பாளை தரிசித்து சென்றால் எண்ணிய காரியம் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar