Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப ... கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று கொண்டாடிய திருவிழா கமுதி அருகே ஆண்கள் மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருக் குடைகளுக்கு ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை
எழுத்தின் அளவு:
திருமலை திருக் குடைகளுக்கு ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை

பதிவு செய்த நாள்

04 அக்
2021
12:10

சென்னை : திருமலை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் திருக்குடைகளுக்கு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் இருந்து, திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் இரண்டு மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் மலர்மாலை; மற்றொன்று, 200 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்து திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது.ஹிந்து தர்மார்த்த ஸமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும், 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வரும் 10ம் தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுவதாக, ஹிந்து தர்மார்த்த ஸமிதியினர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நேற்று சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில், திருக்குடைகளுக்கு யாக பூஜைகள் நடந்தன.வரும், 5ம் தேதி பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில், திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, 9ம் தேதி திருச்சானுார் தாயார் கோவிலில், இரண்டு திருக்குடைகளும்; 10ம் தேதி திருமலை ஏழுமலையான் கோவிலில், ஒன்பது திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.அரசின் கட்டுப்பாடு காரணமாக, மேற்கண்ட திருக்குடை ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருக்குடை கமிட்டியினருக்கும், பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் வீட்டில் இருந்தே, ஆன்-லைன் வாயிலாக இணைய தளத்தில் கண்டு தரிசிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கடை நிகழ்வுகளை, TirupatiKudai என்ற முகநூல் பக்கத்திலும், RR.GOPALJEE என்ற, யுடியூப் தளத்திலும் பக்தர்கள் நேரலையில் தரிசிக்கலாம் என, திருக்குடை கமிட்டியினர் தெரிவித்தனர்.ஹிந்து தர்மார்த்த சமிதியால் நடத்தப்படும் திருப்பதி திருக்குடை ஆன்மிக நிகழ்வுக்கு, நன்கொடைகள், உண்டியல் வசூல் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
அரியலுார்; கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து, அன்னாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar