Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசி கோவிலில் வழிபாடு வள்ளலார் அவதார தினம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் திருப்பணிக்கு புது விதிகளை உருவாக்கி தி.மு.க., அரசு முட்டுக்கட்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
04:10

மதுரை :தமிழக கோயில்களில் திருப்பணி செய்ய புதுப்புது விதிகளை உருவாக்கி தி.மு.க., அரசு முட்டுக்கட்டையிடுவதாக ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி செய்யப்படும். இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்தும், உபயதாரர்கள் மூலமும் பணி மேற்கொள்ளப்படும். இதில் உள்ளூர்காரர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும். இது அவர்களுக்கு கவுரவம் கூட.

இந்நிலையில் ஹிந்து அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரே பணியை பல பாகங்களாக பிரித்து உபயதாரர்கள் மூலம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபயதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப சிறு திருப்பணிகளை செய்து கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது.ஒரே பணியை வகைப்படுத்தி பிரித்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில வகை பணிக்கு கூடுதல் செலவு ஏற்படும்போது அந்த வேலைக்கான பணத்தை இங்கே துாக்கிப்போடு. அந்த வேலையை கிடப்பில் போடு என திருப்பணிகளில் தொய்வு ஏற்படும். திருப்பணியை எந்த ஒப்பந்ததாரரும், உபயதாரரும் ஆர்வமுடன், இறை பணியாக மேற்கொள்ள முடியாத வகையில் பல விதிகளை உருவாக்கியுள்ளது.

ஹிந்து அமைப்பினர் கூறுகையில், அறநிலையத்துறையின் விதிகளை படித்து பார்த்தால் இனி எவரும் கோயில் திருப்பணிகளை செய்ய முன்வர மாட்டார்கள். ஒவ்வொரு மதிப்பீடும் அனுப்பும்போது அதை குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லதுதான். அதேசமயம் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறும்போது மதிப்பீட்டை மாற்றி மாற்றி அனுப்புவதிலேயே காலம் கழிந்துவிடும். திருப்பணி செய்வதும் தள்ளிபோகும். இதன்மூலம் கோயில் திருப்பணிக்கு தி.மு.க., அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.

அறங்காவலர் குழு அமைக்க தயக்கம்: கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களின் பங்கு முக்கியம். எந்த ஒரு பணி என்றாலும் அறங்காவலர்களின் ஒப்புதல் அவசியம். ஆனால் 10 ஆண்டுகளாக பல கோயில்களில் இக்குழுவை அமைக்க முந்தைய அ.தி.மு.க., அரசும், தற்போதைய தி.மு.க., அரசும் ஆர்வம் காட்டவில்லை. அறங்காவலர்கள் வந்தால் தங்களுக்கு பவர் இல்லாமல் போய்விடும் என அதிகாரிகள் கருதுவதே காரணம். கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியதில் பயனற்ற நகைகளை உருக்கி கட்டியாக மாற்றி டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு கோயில் வளர்ச்சிக்கு செலவிட போவதாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி வருகிறார். இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar