Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் ... பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருகே பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருகே பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

07 அக்
2021
10:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, பல்லவர் கால அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.  திருவண்ணாமலை, மரபுசார் அமைப்பை சேர்ந்த வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் ராஜ்பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர்,  தெள்ளார் பகுதியில் களஆய்வில்  ஈடுபட்டனர்.  அப்போது நல்லுாரில்,  பெரியகுப்பம் செல்லும் சாலையில் ஒரு விவசாய நிலத்தில், பல்லவர் கால அய்யனார் சிலையை கண்டெடுத்தனர்.  

இது குறித்து, ராஜ்பன்னீர்செல்வம் கூறியதாவது: நல்லுாரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால அய்யனார் சிலை, மூன்றரை அடி அகலம், நான்கு அடி உயரம் கொண்ட, பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஜடாபாரம் தலையை அலங்கரித்தவாறும், வட்டமான முகம், தடித்த உதடு, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணியப்பட்டுள்ளது. கழுத்தில் உருண்டையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பளி  மாலை, இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து உத்குதிகாசன கோலத்தில், வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளவாறு உள்ளது. இடையில் உதிரபந்தம், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவாள் உள்ளது. வலது கையை, வலது காலின் முட்டி மீது வைத்து, கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றிக் கொண்டும், இடது கை தொடை மீது வைக்கப்பட்டுள்ளது. இடது காலின் அருகே அய்யனாரின் வாகனமான குதிரை,   இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்று உள்ளது.  தலைப்பகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது. இவை,  9-ம் நுாற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தை சேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar