Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம் ... மைசூரு தசரா விழா துவக்கம்: மின் விளக்கில் ஜொலித்த அரண்மனை மைசூரு தசரா விழா துவக்கம்: மின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மகர விளக்கு காலத்தில் தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை மகர விளக்கு காலத்தில் தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

08 அக்
2021
10:10

திருவனந்தபுரம் : மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களின் துவக்கத்தில் சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலம் அடுத்த மாதம், 16ல் துவங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாததால் சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள், நவ., 16ல் துவங்குகிறது. துவக்கத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வரை, அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தால் நிலைமையை ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும்,

மேலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இம்முறை சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு, டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அய்யப்பனை தரிசித்த பின், பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar