Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ... திருப்பதி பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன்  நிறைவடைந்தது திருப்பதி பிரம்மோற்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிக்கிழமை.. வெற்றித்திருநாளில் கோயில்கள் திறப்பு: மகிழ்ச்சியுடன் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளிக்கிழமை.. வெற்றித்திருநாளில் கோயில்கள் திறப்பு: மகிழ்ச்சியுடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

15 அக்
2021
09:10

தேவகோட்டை: இந்துக்கள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவை காரணம் கூறி மாநில அரசு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் திறப்பிற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் தடை செய்தது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மனை வழிபாடு செய்வது மரபு. தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்.

மற்ற துறைகளில் திறந்து விட்ட அரசு கோயிலை திறக்க வில்லை. பண்டிகை காலம் என்பதால் ஆன்மிகவாதிகள் போராட்டங்கள், கோர்ட்டை நாடினர். இந்நிலையில் நேற்று அரசு கோயில் வழிபாட்டுக்கு அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமியையும் அம்மனையும் கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். பக்தர்கள் மகிழ்ச்சி யோடு சுவாமி கும்பிட்டனர். குறிப்பாக அம்மன் கோயில்களில் பெண்கள் அதிகளவில் வழிபாடு நடத்தினர்.

கோயிலுக்கு வந்த தனலட்சுமி , நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மங்கலகரமாக அம்மனை கும்பிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமா தியேட்டரை திறந்த அரசு கோயிலை திறக்க தடை செய்தது நெருடலாகத்தான் இருந்தது. இப்போதாவது திறக்க உத்தரவிட்டது மகிழ்ச்சி. மக்கள் எல்லோரையும் நன்றாக வைத்திருக்குமாறு சுவாமியை வேண்டினேன். விஜயதசமி வெற்றிக்குரிய நாள் . இன்று கோயிலை திறந்தது வெற்றிதான். என கூறினார்.

ஹிந்து சேனா இயக்க மாநில செயலாளர் சுரேஷ் கூறுகையில் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கோயிலை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசிற்கு நன்றி. இந்துக்களின் புனிதமான நாள் வெள்ளி. போரில் வெற்றி பெறும் நாளான இன்று கோயிலை திறக்க சொன்னதும் ஒரு வகை வெற்றி தான். நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. கோயிலை திறக்க உத்தரவிட்ட தை போல திருவிழாவை சமூக இடைவெளியுடன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்த உத்தரவிடவேண்டும். என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar