Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... விஜயதசமி: நடராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு விஜயதசமி: நடராஜர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க அம்பாரியில் சிவப்பு பட்டாடையுடன் மைசூரு சாமுண்டீஸ்வரி ஜொலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தங்க அம்பாரியில் சிவப்பு பட்டாடையுடன் மைசூரு சாமுண்டீஸ்வரி ஜொலிப்பு

பதிவு செய்த நாள்

16 அக்
2021
10:10

மைசூரு: தங்க அம்பாரியில் சிவப்பு பட்டாடை உடுத்தி வந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவியதன் மூலம், மை சூரு தசரா விழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று நட ந்தது. இதன் மூலம், 2021 க்கான தசரா விழா கோலாகலத்துடன் நிறைவு பெற்றது.

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, கடந்த 7 ல், நாட்டின் மூத்த அரசியல் தலைவர் எஸ் . எம் . கிருஷ்ணா துவக்கி வைத்தார். அன்று முதல், நேற்று முன்தினம் வரை , அரண்மனை வளாகத்தில் தினமும் வெவ்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நட ந்தன. மாநிலத்தின் புகழ்பெற்ற பாடகர்கள், நாடக கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தசரா விழாவின் நிறைவு நாளான நேற்று விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாமுண்டி மலையிலிருந்து, தங்கத்தால் ஆன சாமுண்டீஸ்வரி தேவியை ஊர்வலமாக அரண்மனைக்கு கொண்டு வந்தனர். கொரோனாவால் அரண்மனை வளாக நிகழ்ச்சியை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், சாமுண்டீஸ்வரி தேவியை பொது மக்கள் தரிசிக்கும் வகையில் பல்லக்கில் வைத்து திறந்த வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. சாலையோரங்களில் நின்று கொண்டு ஏராளமானோர் சாமியை தரிசித்து வழிபட்டனர். பின், அரண்மனை வளாகத்துக்கு கொண்டு வரும் போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் அமர வைக்கப்பட்டார். இதற்கிடையில் , உடையார் மன்னர் வம்சத்தை சேர்ந்த யதுவீர், பாரம்பரிய முறைப்படி வன்னி மரத்துக்கு பூஜை செய்தார். பின், மாலை 4:36 மணியிலிருந்து, 4:46 மணிக்குள் அரண்மனையின் பலராமா நுழைவு வாயில் பகுதியில், நந்தி கொடிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பூஜை செ ய்தார். இதன் பின்னர், மாலை 5:30 மணியளவில், சுபமுகூர்த்தத்தில், அபிமன்யு யானை மீது, தங்க அம்பாரியில் சிவப்பு பட்டாடை உடுத்தி வந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது, முதல்வர் பசவராஜ் பொம்மை , மேயர் சுனந்தா பாலநேத்ரா , அமைச்சர் சோமசேகர், மன்னர் வம்சத்தின் யதுவீர், மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம், போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா ஆகியோர் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி ஜம்புசவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இதே வேளையில் போலீசார் தேசிய கீதத்தை இசைபேண்ட் மூலம் வாசித்தனர். ஏழுபீரங்கிகள் மூலம், 21 குண்டுகள் முழங்கி தேவிக்கு வெற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. வழக்கம் போல் இல்லாமல், அரண்மனை வளாகத்துக் குள்ளேயே ஜம்பு சவாரி ஊர்வலம் முடித்து கொள்ளப்பட்டது. இத்துடன், 2021க்கான மைசூரு தசரா விழா கோலாகலத்துடன் நிறைவுபெற்றது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar