Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூ புத்தரி பூஜைக்கு கேரளாவிலிருந்து ... வடபழநி ஆண்டவர் கோவிலில் பாலாலயம் வடபழநி ஆண்டவர் கோவிலில் பாலாலயம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டு பகுதியில் கிடந்த கல்தூண் வரலாற்று ஆர்வலர் வேதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காட்டு பகுதியில் கிடந்த கல்தூண் வரலாற்று ஆர்வலர் வேதனை

பதிவு செய்த நாள்

28 அக்
2021
04:10

பல்லடம்: பல்லடம் அருகே, பழமையான கல் தூண் ஒன்று காட்டு பகுதியில் கிடந்தது, வரலாற்று ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த அனுப்பட்டி - வெங்கிட்டாபுரம் செல்லும் ரோட்டில், பழமையான கோவில் கல் தூண் ஒன்று காட்டு பகுதியில் வீசப்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு செய்து, அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், சோழர் காலத்தின் பழம்பெருமை வாய்ந்த சிறப்புகள் பல்லடம் வட்டாரம் முழுவதும் ஏராளமாக உள்ளன.‌ பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பல பொக்கிஷங்கள், தொல்லியல் துறையின் கவனக்குறைவால் அழிந்து வருகின்றன. அவ்வாறு, பல்லடம் அடுத்த அனுப்பட்டி அருகே, பழமை வாய்ந்த கல்தூண் ஒன்று ரோட்டோரத்தில் உள்ள காட்டு பகுதியில் யாரோ சிலர் வீசி சென்றுள்ளனர். படி வைத்து கல்தூண் குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, அனுப்பட்டி கிராமத்தில், வரலாற்று சிறப்புமிக்க பழமையான கோவில் ஏதோ ஒன்று இருந்துள்ளது. கல்தூணில் விநாயகர், முருகன், வேல், மயில், பாம்பு, மற்றும் சில லிங்கத்தின் மீது பால் சுரக்கும் பசு உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அனுப்பட்டி என்று ஊர் பெயரும்,

ஸ்ரீ ராம ஜெயம், ஜெகன்நாதன் என்ற பெயரும் இடம் பெற்றுள்ளன. இப்போதுள்ள கல் தூண்களில் இதுபோன்ற சிற்பங்களைப் பார்க்க முடியாது. எனவே, இது நூற்றாண்டுகள் பழமையான கல்தூணாக இருக்க வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட சிற்பங்களை கண்டறியவும், கோவில் குறித்து ஆய்வுகளையும் மேற்கொள்ளவும் தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar