Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டு மாரியம்மன் கோவில் ... கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் வெட்டிய காங் முன்னாள் தலைவர் மணியால் சர்ச்சை கோவிலுக்குள் பிறந்தநாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டு பழமையான அடுக்குநிலை நடுக்கல்; அருப்புக்கோட்டை பந்தல்குடியில் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2021
06:10

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் விஜயநகர காலத்தை சேர்ந்த கர்நாடக பாணியில் அமைந்த 600 ஆண்டுகள் பழமையான 4 அடுக்கு ,2அடுக்குநிலை நடுக்கல்

கண்டறியப்பட்டதாக, கள ஆய்வில் ஈடுபட்ட எஸ்.பி.கே., கல்லுாரி பேராசிரியர் விஜயராகவன் ,மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: 4 அடுக்கு நிலை கல் 5 அடி உயரம், 1 அடி அகலம் கொண்டது. கல்லின் துாணின் இருபக்கமும் சிறிய சிற்பங்கள் , சிறிய அளவிலான புடைப்பு சிற்பங்களும் உள்ளன. நடுக்ககல்லில் லிங்கத்தை வணங்கும் வீரர், குதிரை மீது அமர்ந்துள்ள இருவீரன் சிற்பங்கள், இருபுறமும் மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன், வீரர்கள் தங்கள் துணைவியரோடு இருக்கும் சிற்பங்கள், 4 பெண்களில் இருவர் சதி மேற் கொண்டனர் என்பதற்கு சான்றாக கையை மேலே உயர்த்திய நிலை சிற்பங்கள் காணப்படுகிறது. இதில் சூரியன், சந்திரன் உருவங்கள் உள்ளன. மற்றொரு நடுக்கல்லில் வீரன் பல்லக்கில் அமர்ந்த நிலையிலும் அதை 2 பேர் சுமந்தவாறு சிவலிங்கத்தை வணங்கியவாறு உள்ளது.மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் நடந்த உட்பூசல் போது உயிரிழந்த வீரர்கள், சதி மேற்கொண்ட வீரர்களின் துணைவிகள் நினைவை போற்றும் வகையில் 4 நிலை நடுக்ககல் அமைக்கப்பட்டு இருக்கலாம். தற்போது இந்த நடுக்கல்லை இங்குள்ளோர் கோணப்பன், கொண்டம்மன் என்ற பெயரிலும் வழிபடுகின்றனர், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar