பெண்கள் எங்கு போற்றப்படுகிறார்களோ அங்குதான் வளர்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். ஒரு பெண் கல்வி பெறுவதால் அக்குடும்பமே கல்விபெறும் என்று சொல்கிறோம். ஆனால் இன்று சில பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை தனியார் பள்ளியிலும், பெண் குழந்தைகளை அரசு பள்ளியிலும் சேர்க்கின்றனர். பெண்களுக்கு உண்டான மரியாதையை தராததே இதற்கு காரணமாகும். பெண் குழந்தைகள் தாயாக, சகோதரியாக, மனைவியாக என பல அவதாரங்கள் எடுத்து குடும்பத்தின் வளர்ச்சிக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். இப்படிப்பட்ட பெண் குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டாமா... அவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்குவதோடு தேவையான வசதிகளையும் செய்து கொடுங்கள். அதேபோல் சகோதரிகளை யாரும் பாரமாக கருதக்கூடாது. கல்வி, நல்ல பண்பு என்னும் ஆபரணங்களால் சகோதரிகளை அலங்கரியுங்கள். இதையெல்லாம் பின்பற்றுங்கள். உங்களுக்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.