Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூரில் அண்ணாமலையார் தத்ரூப ... திருப்புத்தூர் ககோளபுரீஸ்வர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் திருப்புத்தூர் ககோளபுரீஸ்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்கனி திருவிழா துவக்கம்: மாப்பிள்ளை அழைப்பு நடந்தது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
10:07

காரைக்கால்:காரைக்கால் அம்மையார்கோவில் மாங்கனி திருவிழாவின் முதல் நாளான நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின்  வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.பரமதத்தர் செட்டியார் பட்டுவேட்டி, முத்துமாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக் கப்பட்டு, ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டார்.

மாப்பிள்ளை அழைப்பு: முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாராதனை முடிந்து, மாப்பிள்ளை பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தர் செட்டியார் அலங்கரித்த வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது.

திருக்கல்யாணம்: இன்று காலை (2ம் தேதி) புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 10.30 மணிக்கு காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடக்கிறது.மாலையில் பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமணம் முடிந்து காரைக்கால் அம்மையார் - பரமதத்தர்  முத்து பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

மாங்கனி வீசும் நிகழ்ச்சி: நாளை(3ம் தேதி) அதிகாலை பிக்ஷõடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 8 மணிக்கு சிவபெருமான் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா நடக்கும். அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைதம்பி ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar