Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் வழிபாடு; பக்தர்கள் ... சத்ய சாய் பிரசாந்தி மந்திரில் 24 மணி நேர அகண்ட பஜனை நிறைவு சத்ய சாய் பிரசாந்தி மந்திரில் 24 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

15 நவ
2021
10:11

சபரிமலை : மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு மண்டலகாலம் ஆரம்பமாகிறது.

தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்த்திகை ஒன்றாம் தேதி வருவதால் இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றிய பின் 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, அங்கு நிற்கும் புதிய மேல்சாந்திகள் சபரிமலை என். பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகைப்புறம் சம்பு நம்பூதிரி ஆகியோரை அழைத்து ஸ்ரீகோயிலுக்கு முன்பு வருவார்.

7:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரிக்கு அபிேஷகம் நடத்தி ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைப்புறம் கோயிலிலும் சடங்கு நடைபெறும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். இந்த சீசனில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் இரண்டு தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் மற்றும் ஆதார் ஒரிஜினல் கார்டுடன் வரவேண்டும்.பம்பை கணபதி கோவில் அருகே உள்ள கவுண்டரில் கூப்பன் சரிபார்க்கப்பட்ட பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பத்தணந்திட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சபரிமலையில் பெய்த கனமழையால் இறுதி கட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.போலீசார், தீயணைப்பு வீரர்கள், டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் இங்கு வந்து பொறுப்பேற்றுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar