Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... கணபதி பாளையம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பாளையம் சித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விமானத்தில் பறந்தாரா ராவணன்? ஆய்வு செய்கிறது இலங்கை!
எழுத்தின் அளவு:
விமானத்தில் பறந்தாரா ராவணன்? ஆய்வு செய்கிறது இலங்கை!

பதிவு செய்த நாள்

16 நவ
2021
10:11

கொழும்பு :ராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்: நம் அண்டை நாடான இலங்கையின் அரசனான ராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், ராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. ராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், ராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, ராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மீண்டும் துவக்கம்:  இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள்
பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ராவணன் தன் விமானம் வாயிலாக இந்தியாவுக்கு முதன்முதலாக பறந்து சென்று, மீண்டும் இலங்கை திரும்பியதாக கூறப்பட்டது.இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்காக இலங்கை அரசு, 20 லட்சம் ரூபாய் நிதியை அப்போது ஒதுக்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் தற்போதுள்ள இலங்கை அரசு, இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாக கருதுகிறது.

இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஆய்வு மீண்டும் துவங்குகிறது.இலங்கையின் விமான வரலாறு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவரும், அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவருமான சசி தனதுங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராவணன், இதிகாசத்திற்காக புனையப்பட்ட கற்பனை கதாபாத்திரம் அல்ல. அவர் உண்மையில் வாழ்ந்த அரசன். அவரிடம் விமானங்களும், விமான நிலையங்களும் இருந்தன. அவை இன்றைய விமானங்களை போலி இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை வேறு தொழில்நுட்பத்தில் இயங்கி இருக்கக்கூடும். அந்த காலத்தில், இலங்கை மற்றும் இந்தியாவில் பல நவீன தொழில்நுட்பங்கள் இருந்துள்ளன. இது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம்.

பழங்கால சாதனை: இந்த ஆய்வு, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. நம் பழங்கால சாதனைகளை உலகுக்கு உணர்த்த, இந்த ஆய்வில் இந்திய அரசும் இணைந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar