பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
11:07
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நாளை (3ம்தேதி) பவுர்ணமியை முன்னிட்டு மாடவீதி வலம் உற்சவம் நடக்கிறது. பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள், நந்திக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் தீபாராதனை நடந்தது.நாளை (3ம் தேதி) பவுர்ணமியை முன்னிட்டு மாலை கோவிலின் மாட வீதிகளில் வலம் உற்சவம் நடக்கிறது. அதனையொட்டி மாலை அம்பாள் , வீரட்டானேஸ்வரர், விநாயகர், சுப்ரமணியர், சரக்கொன்றைநாதர், திருநாவுக்கரசர், சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மாடவீதிகளில் உற்சவர் சந்திரசேகர் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் மாட வீதிகளில் 16 முறை வலம் வருதல் நடக்கிறது. இரவு 11 மணிக்கு மூலவர், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகளை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது.