Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் கார்த்திகை ... காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மஹா தீபம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மஹா தீபம்

பதிவு செய்த நாள்

18 நவ
2021
09:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.  தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா திரி, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில்  பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று  மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நேற்று  மஹா தீபம் ஏற்ற பயன்படுத்த உள்ள, 1,000 மீட்டர் காடா துணியிலான திரி தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா, சாமந்தி, பூக்களால்  தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று மதியம், 1:00 முதல், வரும், 20 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழாவில், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar