Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக் கோயில் உண்டியலில் ரூ 2.36 ... சாமி சிலைகள் உடைப்பில் மதமாற்ற கும்பல்? பகீர் பின்னணி! சாமி சிலைகள் உடைப்பில் மதமாற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாய்பாபா 96 வது பிறந்த நாள்: புட்டபர்த்தியில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சத்ய சாய்பாபா 96 வது பிறந்த நாள்: புட்டபர்த்தியில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 நவ
2021
10:11

சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரம்பரிய ரத்தோத்ஸவம் திருவிழா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சத்தியநாராயண பூஜை ஆகியவை இன்று பிரசாந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை https://www.youtube.com/channel/UC5j7MGcyU9wh15gbkvNO3aw என்ற பிரசாந்தி மந்திர் லைவ் சேனல் மற்றும் sri sathya saibaba என்ற பேஸ்புக் பகுதிக்கு சென்று நேரலையில் காணலாம்.



1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கடப்ப ராஜு - ஈஸ்வரம்மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.

1940, மார்ச் 8: சாய்பாபா தனது 14வது வயதில், புட்டபர்த்திக்கு அருகே உள்ள உரவகொண்டா என்ற இடத்தில் தேள் கடித்து மயக்கமடைந்தார். ம யக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார், அழுதார், பாடினார். அவரது செயல்கள் புரியாத புதிராக இருந்தன. அன்று முதல் அவரது வாழ்க்கை திசை  மாறியது என்கிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.

1940, மே 23: சாய்பாபா தனது பெற்றோர், சகோதரர்களை அழைத்தார். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து இனிப்பு, விபூதி உள்ளிட்ட   பொருட்களை வரவழைத்து கொடுத்தார். தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து பிரம்பை எடுத்து, ‘யார் நீ, உனக்கு என்ன ÷ வண்டும்’ என்று கேட்டார். அதற்கு சாய்பாபா, ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்’ என்றார். அன்று முதல் சத்யநாராயண ராஜு,  சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.
      
1944: சாய்பாபா, குடும்பத்தில் இருந்து பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப்பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொடங்கினார். ஆன்மிக பயணமாக  பெங்களூருக்கு சென்றார். தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி கட்டியிருந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார்.

1950, நவம்பர் 23: புட்டபர்த்தியில் றிபிரசாந்தி நிலையம்றீ என்ற பிரமாண்ட ஆசிரமம் கட்டி, சாய்பாபா தனது 28வது பிறந்த நாளில் திறந்து  வைத்தார்.  

1957, அக்டோபர்: பிரசாந்தி நிலைய வளாகத்தில் இலவச மருத்துவமனையை திறந்தார்.   

1968, ஜூன் 29: சாய்பாபா, முதன் முதலாக ஆன்மிக பயணமாக நமிபியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.  

1968, ஜூலை 22: ஆந்திர மாநிலம், அனந்தபூரில் மகளிர் கல்லூரியை திறந்து வைத்தார்.

1968: மும்பையில் ஆன்மிகம் மற்றும் சமுக சேவைக்காக தர்மஷேத்ரா அல்லது சத்யம் மந்திர் ஒன்றை நிறுவினார்.

1972: ஆன்மிக மற்றும் சமுக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார்.

1973: ஐதராபாத்தில் சிவம் மந்திர் நிறுவினார்.

1981, நவம்பர் 22: புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

1981: சென்னையில் சுந்தரம் மந்திர் நிறுவப்பட்டது.

1993, ஜூன் 6: பாபாவின் படுக்கை அறைக்குள் திடீரென மர்ம நபர்கள் நுழைந்து அவரை தாக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், ஆசி ரமத்தின் தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆசிரம தொண்டர்கள் 2 பேரும் பலியானார்கள்.

1995, மார்ச்: ஆந்திர மாநிலத்தில் வறண்ட பிரதேசமாக ராயலசீமா பகுதியில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர்  திட்டத்தை நிறைவேற்றினார்.

1999: மதுரையில் ஆனந்த நிலையம் மந்திர் நிறுவினார்.

2001: ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பெங்களூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனையை நிறுவினார்.

2005: உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி, அருளாசி வழங்கத் தொடங்கினார்.

2006: இரும்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய்பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

2011, மார்ச் 28: மூச்சு திணறல் காரணமாக, புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவமனையில் சத்ய சாய்பாபா சேர்க்கப்பட்டார்.

2011, ஏப்ரல் 24: ஞாயிற்றுக்கிழமை காலை 6.25 மணியளவில் சத்ய சாய்பாபா காலமானார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆசிரமத்தில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar