Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர லிங்கம் தரிசன தடை: கோவில் முன் ... புத்தேரி சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு புத்தேரி சந்திர மவுலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி வேலைகள் செய்ய அனுமதி மறுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி வேலைகள் செய்ய அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள்

03 டிச
2021
03:12

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் திருப்பணிகள் செய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட திருப்பணி குழுவிற்கு அனுமதி மறுத்து ஹிந்துசமய அறநிலையத்துறை பாராமுகம் காட்டிவருகிறது.

உத்தமபாளையம் முல்லை பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில். இந்தக் கோயிலில் ராகு கேது தனித்தனி சன்னதியில் எழுந்தருளி காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது கடந்த 2020 ஜனவரி மாதம் புதிய திருப்பணி குழு அமைத்து ஹிந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டது. ஒய்வ பெற்ற வங்கி அதிகாரி எம். சண்முகம் தலைமையிலான குழு, பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே 60 சதவீதத்திற்கு மேற்பட்ட திருப்பணிகளை முடித்தது. . இன்னும் 40 சதவீத பணிகளை மீதமுள்ளை திருப்பள்ளி குழுவின் பதவி காலம் ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் - 2021 ஜனவரி மாதத்துடன் பதவி காலம் முடிவடைந்தது. திருப் பணிகளை முடித்து தர பதவி காலத்தை நீடித்து தருமாறு திருப்பணிக்குழு ஹிந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு கடிதம் எழுதியது. கடிதம் எழுதி 10 மாதங்களுக்கு மேலாகியும் ஹிந்து.சமய அறநிலைத்துறை பாராமுகம் காட்டிவருகிறது. இதனால் கோயில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நின்று போன திருப்பணியை மீண்டும் தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்கெனவே நியமிக்கப்பட்ட திருப்பணிக்குழலிற்கு அனுமதி தர ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar