Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பில் மாற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பில் மாற்றம்

பதிவு செய்த நாள்

04 டிச
2021
11:12

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.19 லட்சத்தில் அம்மன் சன்னதி பள்ளியறை படிகள், கல் பீடங்களுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிச.,16 முதல் 2022 ஜன.,13 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நாட்களில் கோயில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். உச்சிகால பூஜை முடிந்து மதியம் 12:00 மணிக்கு நடைசாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9:00 மணிக்கு பூஜை முடிந்து கோயில் நடைசாத்தப்படும். இந்நாட்களில் அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

எண்ணெய் காப்பு உற்ஸவம்: இந்த உற்ஸவம் டிச.,11 முதல் 19 வரை நடக்கிறது. இந்நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்மன் உற்ஸவ சன்னதியில் தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடக்கும். பின் அங்கிருந்து புறப்பாடாகி ஆடி வீதிகளில் அம்மன் வலம் வருவார். டிச.,18 கோ ரதத்திலும், டிச.,19 கனக தண்டியலிலும் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். டிச.,20 திருவாதிரை அன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருவர்.

திருவெண்பா உற்ஸவம்: இந்த உற்ஸவம் டிச.,11 முதல் 20 வரை நுாறு கால் மண்டபம் அருகில் நடராஜர் சன்னதி முன் நடக்கிறது. டிச.,20 பொன்னுாஞ்சல் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமி சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்ததும் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் ஆடி வீதிகளில் வலம் வருவர்.

ஆருத்ரா தரிசனம்: டிச.,19 இரவு முதல் டிச.,20 அதிகாலை வரை நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். இக்கோயிலில் மட்டும்தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜக்குரிய ஐந்து உற்ஸவ சிலைகள் உள்ளன. அபிஷேக பொருட்களை கோயில் உள்துறை அலுவலகத்தில் டிச.,19 இரவு 7:00 மணிக்குள் பக்தர்கள் வழங்கலாம் என நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar