ராஜபாளையம்: ராஜபாளையம் கே. எஸ் .ஆர் திருமண மண்டபத்தில் சென்னை ஹரிஹர குருஜீ பக்த சமாஜம் மற்றும் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் சாஸ்தா சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம் கல்யாண நாயக சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்தி ஹோமம், அபிஷேகங்கள் தீபாராதனை, நாம சங்கீர்த்தனம் பிரசாத விநியோகம் நடந்தது. கே.எஸ்.ஆர் பஸ் கம்பெனி அதிபர் முத்து சிங்க ராஜா வரவேற்றார். சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை திரளான பக்தர்கள் படை சூழ பஜனை, கலை நிகழ்ச்சிகள் திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. சென்னை ஹரிஹர குருஜீ பக்த சமாஜ குழுவினர் மற்றும் ராஜபாளையம் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல்வேறு ஐயப்ப பக்த குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். திருக்கல்யாண அன்னதானம் நடந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.