உலகில் 4448 வியாதிகள் இருப்பதாக கணக்குண்டு. இந்த நோய்களை தீர்க்க வல்லவரான சிவபெருமான் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதராக அருள்புரிகிறார். இங்குள்ள அம்மன் தையல்நாயகியின் கையில் தைலப்பாத்திரம் உள்ளது. தைலம், அமிர்த கலசம், வில்வ மரத்தடி மண் கொண்டு அம்மன் பக்தர்களின் நோய்களை போக்குகிறாள். மருத்துவ குணம் மிக்க வேப்ப மரம் இங்கு தலவிருட்சம். நோய் தீர்க்கும் மருந்தான ‘திருச்சாந்துருண்டை’ பிரசாதம் இங்கு வழங்கப்படுகிறது. ....நரகத்தை தடுக்கும் பாட்டு ‘திருமால் பெருமைக்கு நிகர் ஏது; அவன் திருவடி நிழலுக்கு இணையேது’ என்பார்கள். திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், சிதம்பரம் சித்ரக்கூடம் ஆகிய ஐந்து திருத்தலங்களில் இவர் பாடிய பாடல்களில் ராம, கிருஷ்ண அவதாரத்தின் பெருமையை விளக்கியுள்ளார். திருவித்துவக்கோடு பெருமாள் மீது பாடிய பாடல்கள் மிக உருக்கமானவை. ‘தாயின் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தை, கணவனையே நம்பி வாழும் பதிவிரதை, மன்னனை எதிர்பார்த்திருக்கும் குடிமக்கள், மருத்துவரை நம்பியிருக்கும் நோயாளி போல ‘நானும் உன்னையே நம்பி சரணடைந்தேன் என்னை ஏற்றுக்கொள்வாயாக’ என்று பாடியுள்ளார். இப்பாடல்களை பாடுபவர்கள் நரகம் செல்ல மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கிறார்.