ராமனுக்கு அடியவர் என்பதால் அனுமனுக்கு ‛ராமதாசர் என்று பெயர். அவர் மீது துளசிதாசர் பாடியது அனுமன் சாலீஸா நாற்பது பாடல் கொண்டது. இதைப்பாடினால் கோழையும் தைரியசாமியாக மாறிவிடுவான் என்பர். ஹிந்தியில் இருந்தாலும் மொழி வேற்றுமையின்றி நாடு முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களால் பக்தியுடன் படிக்கப்படுகிறது. அந்நியப்படையெடுப்பின் போது மக்கள் மத்தியில் பக்தி, தேசப்பற்றை நிலை நிறுத்திய பெருமை இதற்குண்டு.