Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை கோயிலில் சுவாமி சிலைகள் ... குவிந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்: திக்குமுக்காடியது பழநி குவிந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷா மையத்துக்கு நோட்டீஸ்: நடவடிக்கை எடுக்கத் தடை
எழுத்தின் அளவு:
ஈஷா மையத்துக்கு நோட்டீஸ்: நடவடிக்கை எடுக்கத் தடை

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
12:01

சென்னை : கோவை ஈஷா யோகா மையத்தில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், கட்டுமானங்கள் மேற்கொண்டதாக அனுப்பிய, நோட்டீஸ் மீது, நடவடிக்கை எடுக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா அறக்கட்டளை சி.ஆர்.தினேஷ் ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஈஷா அறக்கட்டளை வளாகத்தில், 2006 முதல் 2012ம் ஆண்டு வரை, 91 ஆயிரத்து 519 சதுர மீட்டர் அளவிற்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, உண்டு உறைவிடப் பள்ளி, யோகா பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தன.

கடந்த 2006ம் ஆண்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின் படி, அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி, இனிமேல் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டது. அதன்பின், 2014ல் பிறப்பிக்கப்பட்ட விதிகளின் படி, கல்வி நிலையங்கள் என்ற அடிப்படையில், விலக்கு கோரி மனு கொடுக்கப்பட்டது.  கடந்த 2014க்கு முன் மற்றும் பின் என, கட்டடங்களை இரு வகையாக பிரித்ததாகவும், கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை எனவும், விலக்கு கோரி விண்ணப்பித்திருந்தோம். ஆனால், 2021 நவம்பர் 19ம் தேதி, விதிமீறல் கட்டடங்கள் கட்டியதற்காக, ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் இன்ஜினியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எங்கள் மையத்திற்கு எதிரான நோட்டீசுக்கு தடை விதித்து, அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டது.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தபட்ட நீதிமன்றத்தில், ஏற்கனவே புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, 2014ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில், முன் தேதியிட்டு அமல்படுத்துவதாகக் குறிப்பிடப்படாத நிலையில், அதற்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது, எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதுவரை, ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க காக்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி ; புதுச்சேரி அடுத்த வில்லியனூர் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar