Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படியனூர் பழநி ஆண்டவர் கோவிலில் ... ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரர் தைப்பூச தீர்த்தவாரி ஈசான்ய குளக்கரையில் அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜந்து நாட்களுக்குப்பின் கோவில்களில் அனுமதி: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜந்து நாட்களுக்குப்பின் கோவில்களில் அனுமதி: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
09:01

வடவள்ளி: மருதமலையில், 5 நாட்களுக்குபின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கடந்த, 14 முதல் 18ம் தேதி வரை கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, கோவில்களில், 5 நாட்கள், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தைப்பூச திருவிழாவும் பக்தர்களின்றி நடந்தது. இந்நிலையில், கோவில்களில் பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். தைப்பூசத்தன்று பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், நேற்று, பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் மருதமலைக்கு வந்தனர்.

தைப்பூசத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 12:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:30 மணிக்கு பொன்னூஞ்சல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து, 7:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரமாய் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, தெப்பத் திருவிழா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar