செஞ்சியில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2022 10:01
செஞ்சி: செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா குழுவினர் நேற்று செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடை பயணம் துவக்கினர். செஞ்சி ஸ்ரீ வெங்கடகிரி கோவிந்த நாம சபா சார்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் 22வது ஆண்டாக மார்கழி மாதம் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் நேற்று திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். முன்னதாக செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பாதையாத்திரை குழுவினருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வழியனுப்பினார். இக்குழுவினர் வரும் 29-ஆம் தேதி இரவு மேல் திருப்பதி சென்றடைகின்றனர்.