திருச்செந்தூருக்கு சைக்கிளில் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2022 11:01
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், பரமக்குடி அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏராளமானோர் திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிவித்து கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் பாதயாத்திரை குழு சார்பாக மாலை அணிந்த பக்தர்கள் சைக்கிளில் பாதயாத்திரையாக பயணம் புறப்பட்டனர். இந்நிலையில் பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் வந்த பக்தர்கள் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தங்கி முருகனுக்கு சிறப்புபூஜை செய்தனர்.பின்பு முதுகுளத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு சைக்கிளில் பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.