Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... பாலையூர் ஐய்யனார் கோவிலில் நகை மற்றும் பொருட்கள் திருட்டு பாலையூர் ஐய்யனார் கோவிலில் நகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்கு 1.5 ஏக்கர் நிலம் வழங்கிய 80 வயது மூதாட்டி
எழுத்தின் அளவு:
கோவிலுக்கு 1.5 ஏக்கர் நிலம் வழங்கிய 80 வயது மூதாட்டி

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
03:01

கூடலுார்: கூடலுார் அருகே, 80 வயது மூதாட்டி, தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம், தான் சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் சூண்டி பகுதியில், புஷ்பம்மாள், 80, என்பவர் வசித்து வருகிறார். ஆதரவற்ற அவரது உணவு தேவையை, அப்பகுதி மக்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.இறை நம்பிக்கை உள்ள அவர், தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை, சூண்டி விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கினார். தற்போது, முதியோர் ஓய்வூதியத்தில் இருந்து சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை, விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக வழங்கி, கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். புஷ்பம்மாள் கூறுகையில், ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லாருக்கும் நல்லதே நடக்கும், என்றார்.

கோவில் கமிட்டி தலைவர் பாஸ்கரன் கூறுகையில், பெரிய மனசுள்ள மூதாட்டி தன்னிடம் இருப்பதை எல்லாம் இறைவனுக்கு வழங்கி வருகிறார். இறைவன் அவருக்கு துணை இருக்கிறார். கடந்த ஆண்டு, வழி தவறி வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போன அவரை, அப்பகுதி இளைஞர்கள் ஐந்து நாட்கள் தேடி கண்டுபிடித்து மீட்டனர். இறைவன் அருளால், ஆரோக்கியத்துடன் இருந்தார். கிராம மக்கள் அவருக்கு என்றும் ஆதரவாக இருப்பர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar