Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் விவேகானந்தர் வருகை ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் வரும் 7ம் தேதி துவங்குகிறது திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் பொன் உலவாக்கிழி பெறும் ஐதீக விழா
எழுத்தின் அளவு:
கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் பொன் உலவாக்கிழி பெறும் ஐதீக விழா

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
02:02

மயிலாடுதுறை: திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பெருவிழாவை முன்னிட்டு திருஞானசம்பந்தர் பொன் உலவாக்கிழி பெறும் ஐதீக விழா விமரிசையாக நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ அதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் ரதசப்தமி பெருவிழா கடந்த29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொன் உலவாக்கிழி வழங்கும் ஐதீக விழா நடைபெற்றது. திருஞானசம்பந்தரின் தந்தையை சிவஇருதயபாதருக்கு வேள்வி நடத்த ஆயிரம் பொற்காசுகள் தேவைப்பட்டது. கோமுக்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து இருந்த திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். பாடல் பாடி முடிந்ததும் பூதகணம் மூலம் கொடிமரம் அருகில் பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகளை இறைவன் கொடுத்து அனுப்பியதாக புராண வரலாறு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும் ரதசப்தமி பெருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தருக்கு பொன் உலவாக்கிழி வழங்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு திருஞானசம்பந்தர் பல்லக்கில் ஊர்வலமாக ஆலய கொடி மரத்திற்கு எழுந்தருளினார். அங்கு இறைவனைப் பாடும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

"காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க்கம்பொன்
ஆயிரங் கொடுப்பர்  திருஞானசம்பந்தர் ஆவடு துறையனாரே"

என்று, திருஞான சம்பந்தருக்கு  தலத்து இறைவன் செம்பொன் அருளிய அருள் திறத்தை, அப்பர்  சுவாமிகள் தம்முடையப் பதிகத்தில் போற்றுகின்றார்.

நச்சி இன்தமிழ் பாடிய ஞானசம் பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன்னருளால்
அச்சிறப்பு அருள் பூதமுன் விரைந்து அகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று.

என்ற பெரியபுராணப்பாடல் இந் நிகழ்வினை பற்றிய குறிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருமுறை இசை அறிஞர்கள் 4 பேருக்கு ரூ.5000 வீதம் பொற்கிழி மற்றும் விருதுகளை வழங்கி அருள் ஆசி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar