புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2022 03:02
புதுச்சேரி: குருமாம்பட்டு புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.புதுச்சேரி, குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள புற்று மாரியம்மன் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டது.அதனையொட்டி வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜை நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி, ஹோமம், மிருத்சங்கரஹணம், பூர்ணாஹூதி நடைபெற்றது.இன்று காலை கோ பூஜை, மகாலட்சுமி பூஜை, அஸ்த்ர ஹோமம், கோபுர கலசம் மற்றும் விக்ரகம் கரிக்கோலம் நடக்கிறது. மாலை, விநாயகர் பூஜையுடன் முதல்கால யாக பூஜை நடக்கிறது.6ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவில் விமானம், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:15 மணிக்கு மேல் புற்றுமாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.